நீங்க அரசியலுக்கு வருவீர்களா ? அப்போது மேடையில் தளபதி சொல்லியுள்ள பதில். அரிய வீடியோ இதோ.

By subhashini · 26/4/2023

எனக்கு அரசியலே தெரியாது, அரசியலுக்கு வர மாட்டேன் என்று விஜய் மேடையில் பேசி இருந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு அறிவித்து இருந்தது.

விஜய் மக்கள் இயக்கம்:

வழக்கம் போல் இதில் பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்களை அடிக்கடி சந்தித்து இருந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. விஜயின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். இதற்காக சினிமாவின் மூலம் ஏராளமான ரசிகர்களை விஜய் தன்வசம் படுத்தி வருகிறார் என்றும், அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் அதற்கான வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம் செய்தது:

அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி உத்தரவிட்டிருந்தார். அப்போது அம்பேத்கர் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கூறியிருந்தார். அந்த வகையில் தமிழக முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். இப்படி விஜய்யின் ஒவ்வொரு செயல்களும் அரசியலுக்கு வருவதை தான் குறிக்கிறது.

விஜய்யின் பழைய வீடியோ:

இந்த நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில்,
சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வருகிறார்கள். எதிர்காலத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று விஜய் இடம் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு விஜய், நிச்சயமாக இல்லை. எனக்கு அரசியல் என்றாலே என்னன்னு தெரியாது. நான் கண்டிப்பாக வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை தான் தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full