பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கும் விழா தொடர்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் முதன் முதலாக வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதற்குப் பிறகு இவர் தன்னுடைய தந்தை இயக்கிய சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் விடாமுயற்சியுடன் விஜய் போராடி இருந்தார். அதற்குப்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மாஸ் காட்டி இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை தூணாக விஜய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது.

Advertisement

விஜய் திரைப்பயணம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மேனன், அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது. மேலும், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அரசியல்:

இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இந்த படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் அரசியலில் முழு தீவிரமாக இறங்க இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்திருந்தார். இதனால் முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலக இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு அளித்து இருந்தார்.

Advertisement

விஜய் நடத்தும் விருது விழா:

இந்த நிலையில் மாணவர்கள் விருது விழா தொடர்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டும் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 1500 மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய் பழங்க திட்டமிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் இந்த விழாவை அதற்குப் பிறகு நடத்தவும், அடுத்த மாதம் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அதற்கு முன்பே இந்த விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறார்.

Advertisement

விஜய் போட்ட உத்தரவு:

மேலும், கடந்த ஆண்டு விருது விழாவில் நடந்த சில குளறுபடிகள் இந்த ஆண்டு இருக்கக்கூடாது என்று விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோரை இழந்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த விழா நடைபெறும் இடம், தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement