சூப்பரா பண்றீங்க, பணம் வேணும்னாலும் கேளுங்க தரேன் - ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

By Rajkumar · 29/4/2023

பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்று ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் வைத்து இருக்கும் கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல்ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்று ஒன்றையும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், இந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் விஜயின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வருகின்றார்கள். சுனாமி, வெள்ளம், தொடர் மழை, கொரோனா போன்ற பல இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஆரம்பித்திருக்கும் விலையில்லா விருந்து திட்டம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலையில்லா விருந்து திட்டம்:

அதாவது, கடந்த சில மாதங்களாகவே விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து என்ற திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ரசிகர்கள் 300 பேரை விஜய் சென்னைக்கு வரவழைத்து பாராட்டி இருந்தார். மேலும், விஜய் ரசிகர்களிடம் சொன்னது, இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த விலையில்லா விருந்து திட்டம் என்ற உணவு திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.

விஜய் வைத்த கோரிக்கை:

இதற்காக பண உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள் நான் செய்கிறேன். இந்த திட்டம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க என்னுடைய முழு ஒத்துழைப்பும் தருகிறேன் என்று ரசிகர்களிடம் விஜய் கூறியிருந்தார். தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் சில முக்கியமான காட்சிகள் படப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full