அட்லீக்கு விஜய் போட்ட கண்டிஷன்.! அட்லீ கொடுத்த விளக்கம்.! தளபதி டா.!

By Rajkumar · 16/4/2019

சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். தெறி , மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து ஆட்லியுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார் விஜய். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள இவிபி ஸ்டுடியோவில் மிகப்பெரிய கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை 'செட்' போட்டுள்ளனர். அங்கே 50 நாட்கள் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் சென்னையில் தான் நடைபெற இருக்கிறது.

நம்ம ஊர் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வெளிமாநிலத்தில் குறிப்பாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் விஜய். அதனாலேயே சென்னையிலும் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சொன்ன பட்ஜெட்டைவிட அதிக செலவாகிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு, அட்லீ மீது குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு விஜய்யிடம் விளக்கம் அளித்த அட்லீ, அந்த மாதிரி எதுவும் இல்லை, எல்லாவற்றுக்கும் சரியான கணக்கு உள்ளது. ஆடிட்டர் வைத்து கூட கணக்கு பார்த்து கொள்ளட்டும் என்று தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறாராம். விஜய்யும் ஏற்றுக்கொண்டதாக தகவல். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full