அன்று செருப்பு வீச்சு, இன்று மீண்டும் கூட்டத்தில் இருந்து விஜய் மீது வீசப்பட்ட விஷயம். விஜய்யின் Reaction.

By subhashini · 14/1/2024

மீண்டும் கூட்டத்திலிருந்து ரசிகர் ஒருவர் விஜய் மீது பொருள் ஒன்றை தூக்கி எறிந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூணாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது.

https://twitter.com/im_inba1/status/1740596343750742431

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. சமீபத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- மாஸ்டர் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

தளபதி 68 படம்:

விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து இருந்தது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

https://twitter.com/vp_offl/status/1746083988308103255?ref_src=twsrc%5Etfw

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் தளபதி 68 திரைப்படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஷூட்டிங்கில் நடந்தது:

இந்த படம் ஒரு விண்வெளி கதையாக இருக்கும் என்றும், விஜய் விஞ்ஞானியாக இருப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். தற்போது படத்தின் சூட்டிங் சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அங்கு தளபதி விஜய் காண ரசிகர்களுடைய கூட்டம் அலைமோதி இருக்கிறது. வழக்கம்போல் விஜய்யும் ரசிகர்களை சந்திக்க கேரவன் மேல் ஏறி நின்று செல்பி எல்லாம் எடுத்திருக்கிறார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் விஜய் மீது பூக்களையெல்லாம் தூவி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

https://twitter.com/RAO_Offl/status/1746089692762866121

வைரலாகும் வீடியோ:

இன்னும் சிலர் மாலை கூட போட்டு இருக்கிறார்கள். விஜய் கழுத்தில் போட முடியாத காரணத்தினால் மாலையை விஜய் பக்கம் தூக்கி வீசி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை தான் வெங்கட் பிரபு சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். காரணம், மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு விஜய் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி திரும்பி வரும்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் விஜய் காரின் மீது செருப்பு வீசி இருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இன்று விஜய் ரசிகர்கள் அவர் மீது இருந்த அன்பினால் மாலையை தூக்கி எறிந்து இருக்கிறார்கள். இதை நெட்டிசன்கள், அன்று செருப்பு, இன்று மாலை என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full