3 நாளில் 'தலைவன் தலைவி’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

By subhashini · 29/7/2025

தலைவன் தலைவி படத்தின் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, மைனா நந்தினி, தீபா வெங்கட், காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், சரவணன், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையேயான உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படமாக தலைவன் தலைவி இருப்பதால் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் படத்தினுடைய வசூல் குறித்த விவரம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

தலைவன் தலைவி படம்:

படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்திய அளவில் 4.15 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் 3 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் படத்தை வீட்டா இரண்டு மடங்கு தலைவன் தலைவி படம் வசூல் செய்து இருக்கிறது. மேலும், இந்த மாதத்தில் ரீலிஸ் ஆன தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த சாதனை என்ற பெருமையை தலைவன் தலைவி படம் பெற்றிருக்கிறது.

படத்தின் வசூல்:

அதோடு தலைவன் தலைவி படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் 25 கோடி வசூல் தாண்டி இருக்கிறது. இதை படக்குழுவே அறிவித்து இருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் இந்த படம் கூடிய சீக்கிரத்திலேயே 100 கோடி வசூல் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் வெளியான அன்று தான் பகத் பாஸில்- வடிவேலு நடித்த மாரீசன் படம் வெளியாகியிருந்தது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 3.33 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல இந்த படத்தினுடைய வசூல் கம்மியாகிக் கொண்டுதான் செல்கிறது.

படத்தின் கதை:

படத்தில் விஜய் சேதுபதி குடும்பத்துடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வருகிறார். பின் விஜய் சேதுபதிக்கு நித்யா மேனனை நிச்சயம் செய்கிறார்கள். அதற்குப்பின் இருவருமே பேசி பழகி காதலிக்கிறார்கள். விஜய் சேதுபதி குடும்பம் ரவுடி என்று நித்யா மேனன் குடும்பத்துக்கு தெரிய வருவதால் திருமணத்தையே நிறுத்தி விட்டார்கள். ஆனால், விஜய் சேதுபதி மீது இருந்த காதலால் தன்னுடைய வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார் நித்யா மேனன். திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நித்யா மேனன் வாழ்க்கை நன்றாக தான் செல்கிறது. குடும்பத்தில் நடக்கும் ஈகோ சண்டை விஜய் சேதுபதி வீட்டிலும் நடக்கிறது.

இதனால் விஜய் சேதுபதியின் அம்மா- தங்கை சேர்ந்து நித்யா மேனனை ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆள் மாதிரி நடத்துகிறார்கள். இதையெல்லாம் நித்யா மேனனின் அம்மா பார்த்துவிட்டு சண்டை போட, விஜய் சேதுபதி- நித்யா மேனன் இருவருக்கும் இடையே கலவரம் தொடங்குகிறது. சண்டை போடுவது, பிரிவது, சேர்வது என்று இவர்கள் இருக்கிறார்கள். இதனால் விஜய் சேதுபதிக்கு வேறொரு திருமணத்தை செய்வது வைப்பதற்காக விஜய் சேதுபதி வீட்டில் முடிவெடுக்கிறார்கள். இந்த தகவலை அறிந்த நித்யா மேனன் சண்டை போட்டு விஜய் சேதுபதியை விட்டு பிரிந்து விடுகிறார். அதற்கு பின் என்ன நடந்தது? இருவரும் சேர்ந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full