ரஜினி போல் அல்லாமல் தன் மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மறுத்துள்ள விஜய் சேதுபதி

By Rajkumar · 7/9/2021

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் ரஜினி ஆரம்பத்தில் தன் படத்தில் மகளாக நடித்த மீனாவுடன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக நடித்தார். இது இப்போதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதே போன்ற வாய்ப்பை பெற்றுள்ள விஜய் சேதுபதி அதை நிராகரித்து இருப்பது பலரின் பாரட்டை பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் செல்வனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் வில்லனாக உப்பென்னா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும்,வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோயினுக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் அசத்தி இருப்பார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழில் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டியை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி கீர்த்தி செட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டாராம். தனக்கு மகளாக நடித்த நடிகை உடன் ஜோடியாக நடிப்பதில் அவருக்கு விரும்பவில்லையாம் என்று தெரியவந்து உள்ளது.

இதனை அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருப்பதாக படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்து உள்ளது. மேலும், நடிகர் விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஜய் சேதுபதி நடித்த லாபம் படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full