விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய்சேதுபதி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது.

இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி அவர்கள் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மகா காந்தி பேட்டி கொடுத்து இருந்தார்.

Advertisement

விஜய் சேதுபதியை உதைத்த காரணம்:

அதில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல மகா சென்று இருக்கிறார். பிறகு அவர் குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கு. பின் விஜய்சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதியை உதைத்ததாகவும் மகா காந்தி பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதி தரப்பில் சொன்ன விளக்கம்:

பிறகு இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளித்துள்ளார்கள். அதில் , என்னை தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். அவர் மாஸ்க் அணிந்து இருந்தால் அவர் முகம் வெளியே தெரியவில்லை. பின் செல்போனில் ஒருவர் வெளியே விவகாரம் ஊதி பெரிதாக்கபட்டதனால் கலவரம் ஆகி என்னை தாக்கிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பிரச்சனை தீர்க்கப்பட்டது. இப்படி உதைத்த மகா காந்தியும், விஜய் சேதுபதியும் தங்களுடைய தரப்பில் இருந்து விளக்கம் அளித்து இருந்தார்கள். அதற்கான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

Advertisement

நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு :

மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்ட மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த மனுவில், விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடைய சாதனைகளை பாராட்டு தெரிவிப்பதற்காக அவரை அணுகினேன். ஆனால், விஜய் சேதுபதி தன்னை இழிவுபடுத்தி பேசியதோடு தன்னுடைய ஜாதியை பற்றி தவறாக பேசினார். அது மட்டுமின்றி தனது மேலாளர் ஜான்சன் மூலமாக தன்னை காலில் உதைத்தார்.

Advertisement

நீதிமன்றத்தின் உத்தரவு:

இதன் காரணமாக தன்னுடைய செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சென்னை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என வாதிடப்பட்டது. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து இந்த விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார் நீதிபதி.

Advertisement