இந்த முறை பிக் பாஸ் வீட்டில் உள்ள வசதியை பார்த்து அசந்து போன விஜய் சேதுபதி -என்னன்னு நீங்களே பாருங்க
தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த எட்டாவது சீசனில் வீடு பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள். மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார். இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது ராஜி, அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள்.
பிக் பாஸ் 9:
இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி தொடர்பாக புரோமோ வீடியோவை இந்த டிவி வெளியிட்டு இருந்தது. இதை அடுத்து அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல்கள் சோசியல் மீடியாவில் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகவில்லை.
https://www.youtube.com/watch?v=3RrNtTKY760
நிகழ்ச்சி குறித்த அப்டேட்:
மேலும், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார்? என்பது நாளை தெரிந்து விடும். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ஒரு சுட சுட அப்டேட் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு ஸ்பேஸ் தீமில் உருவாக்கி இருக்கிறார்கள். கிச்சன், லிவிங் ஏரியா, பெட்ரூம், கண்பெஷன் ரூம் என அனைத்துமே ஹைடெக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இல்லாத வசதிகள் கூட இந்த சீசனில் இருப்பதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வதற்குள் தொகுப்பாளர் உள்ளே சென்று என்ன வசதிகள் இருப்பதை ஒரு பார்வையிடுவது வழக்கம்.
#BiggBossTamil #BiggBoss #BiggBossTamil9 #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBoss9 #BB9 #BBT #VijayTV #VijayTelevision pic.twitter.com/bkZ8DduGb8
— Super Deluxze (@super_deluxze) October 4, 2025
பிக் பாஸ் வீடு:
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் வீட்டை விஜய் சேதுபதி உள்ளே சென்று பார்வையிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோவில் பெட்ரூமிற்கு அருகிலேயே ஜக்குசி இருக்கிறது. ஜக்குசி என்றால் பாத் டப். அதுவும் திறந்தவெளியில் அந்த பாத் டப் இருக்கிறது. அதை வைத்தே நிறைய கன்டென்ட் இருக்கப் போகிறது என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். விஜய் சேதுபதியுமே அந்த ஜக்குசியை பார்த்து இதெல்லாம் இருக்கா என்று ஆச்சரியத்துடன் கூறி இருக்கிறார். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.