சூரியின் மாமன் பட வசூலை நெருங்க முடியாமல் திணறுகிறதா விஜய் சேதுபதியின் ஏஸ் படம் - முழு விவரம் இதோ
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்தது. இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ஆகும். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார்.
விஜய் சேதுபதி குறித்த தகவல்:
முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏஸ். இந்த படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
படத்தின் வசூல்:
இப்படி இருக்கும் நிலையில் ஏஸ் படத்தினுடைய முதல் நாள் வசூல் விவரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம் உலக அளவில் முதல் நாளில் 1.8 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 75 லட்சம் தான் வசூல் செய்தது. கடந்த வாரம் தமிழில் சூரி நடிப்பில் வெளிவந்த மாமன் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டுமே மாமன் படம் 1.54 கோடி வசூல் செய்தது.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி சிறையிலிருந்து வெளிவந்து மலேசியாவிற்கு போகிறார். அங்கு யோகி பாபு மூலமாக தன் பெயர் மாற்றி சமையல் வேலைக்கு போகிறார். இதற்கு இடையில் தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் கதாநாயகி ருக்மணி வசந்த்தை பார்த்ததுமே விஜய் சேதுபதிக்கு காதல் வந்தது. பின் தன்னுடைய காதலை ருக்மணியிடம் விஜய் சேதுபதி சொல்லிவிட்டார். ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்கிறார்கள்.
பின் ருக்மணிக்கு பணம் தேவைப்படுகிறது. இதற்காக ரவுடி அவினாஷ் இடம் விஜய் சேதுபதி கடன் கேட்க சொல்கிறார். அங்கு சூதாட்டம் மூலமாக விஜய் சேதுபதி அதிக பணம் சம்பாதிக்கிறார். இதை பார்த்த அவினாஷ், விஜய் சேதுபதியை ஏமாற்றி பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டு அவரை கடனாளி ஆக்குகிறார். கடைசியில் அவினாஷ் இடமிருந்து விஜய் சேதுபதி பாஸ்போர்ட்டை மீட்டாரா? ருக்மணிக்கு பணம் கொடுத்தாரா? ருக்மணிக்கு அவ்வளவு பணம் தேவைப்பட காரணம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.