தமிழ் சினிமாவில் ஹெட்டர்ஸ் இல்லாத ரசிகர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி பின்னர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தார். மாதவனுடன் விக்ரம் வேதா படத்திலும், சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திலும் வில்லனாகவும் அசத்தினார். தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஹரோ, வில்லன், பாடகர் என்று பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ள விஜய் சேதுபதி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் விஜய் சேதுபதி, இதுவரை ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா, மேற்கு தொடர்ச்சி மலை, சென்னை பழனி மார்ஸ் என்று 4 படங்களை தயாரித்துள்ளார். ஆனால், இந்த 4 படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் பிரபல நடிகர் அசோக் செல்வனிடம் பட தயாரிப்பில் இறங்க வேண்டாம் என்று விஜய் சேதுபதி அட்வைஸ் செய்திருக்கிறார். அதனை அசோக் செல்வனே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement

தமிழில் சூது கவ்வும், தெகிடி, வில்லா போன்ற பங்களில் நடித்த அசோக் செல்வன் தற்போது ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இந்த படத்தினை தில்லி பாபு என்பவர் தயாரிக்க அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.

ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி நடித்த ஒரு காட்சி

Advertisement

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அசோக் செல்வன் ‘இந்த படத்தில் அவர் தேவை என்பதால் அவரை அணுகிய போது, நான் ஒரு படத்தை தயாரிக்க போகிறேன் அண்ணா என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ஐய்யயோ அதெல்லாம் பண்ணாதடா நான் பண்ணிட்டு கஷ்டப்படுகிறேன் என்றார். மேலும், இந்த படத்தில் அவரிடம் நடிக்க கேட்ட போது முதலில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் கதையை கேட்க ஆரம்பித்தார். நட்பின் அன்போட வெளிப்பாடு தான் அவர்’ என்று கூறியுள்ளார் அசோக் செல்வன்.

Advertisement

Advertisement