விஜய் சேதுபதி மகளா இது ? சும்மா எப்படி ஸ்டைலா மாறிவிட்டார். லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

By Rajkumar · 17/2/2024

விஜய் சேதுபதி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிகருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் தனக்கென்று ஒரு மார்கெட்டை உருவாக்கி இருக்கிறார். என்னதான் இவர் வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தாலும் சமீப காலமாக இவர் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றியடையவில்லை.

விஜய் சேதுபதி திகேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும், ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது இவரது மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.அதே போல சிந்துபாத் படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரது மகள் ஸ்ரீஜா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்டைலீசாக இருக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது ஹீரோவாகவும் களமிறங்கி இருக்கிறார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்தப் படத்தை தன்னுடைய சொந்த பேனரில் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பீனிக்ஸ் வீழான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பூஜை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று இருந்தது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அயலி வெப் தொடர் மூலம் கவனம் ஈர்த்த அபி நக்‌ஷத்ரா நடிக்கிறார். இவர்களோடு காக்கா முட்டை விக்னேஷ், வர்ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராஜலட்சுமி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் ' நீங்க ஹீரோ ஆனது குறித்து உங்க அப்பா என்ன சொன்னார்' என்று கேள்வி எழுப்பினார்.

https://www.youtube.com/shorts/DTlyX7twmp0

இதற்கு பதில் அளித்த சூர்யா விஜய் சேதுபதி ' அப்பா வேற, நான் வேற, அதனாலா தான் சூர்யான்னு போட்டு இருக்காங்க, சூர்யா விஜய் சேதுபதின்னு போடல' என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி கேலிக்கும் உள்ளானது. உங்கள் அப்பாவால் தான் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரது படத்தின் மூலம் தான் நீங்க அறிமுகம் ஆனீர்கள் என்றும் கூறி கலாய்த்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full