தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் மாதமே படம் ரிலீஸ் ஆக வேண்டியது.கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா லாக்டவுனால் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

Advertisement

தற்போது அரசு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். மேலும், மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கபட்டது. படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதால் மாஸ்டர் படம் விரைவில் முழுமை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது ஒரு கூடுதல் ப்ளஸ்.

இருப்பினும் அதை விட ப்ளஸ் என்ன தெரியுமா ? இந்த படத்தில் பவானியாக வரும் விஜய் சேதுபதியின் பிளாஸ் பேக் போர்ஷனில் யங் பவானியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார். அவருக்கும் விஜய் சேதுபதி தான் டப்பிங் கொடுத்துள்ளாராம். னது சிறுவயது குரலில் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காகவே இதை அவர் செய்துள்ளாராம்.

Advertisement
Advertisement