விஜயகுருநாத சேதுபதி காளை முத்துவின் அப்பாவை பார்த்துளீர்களா ? இதோ புகைப்படம்.

By Arun · 25/1/2022

முதன் முதலாக சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ள விஜய் சேதுபதியின் தந்தை புகைப்படத்தை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின் தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இவர் என்றென்றும் மக்களின் செல்வனாக திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு கிடைத்த விருது:

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து மழை குவிந்து இருந்தது. இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

விஜய் சேதுபதி திரை பயணம்:

அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ரசிகனின் கொண்டாட்ட விஷயங்களில் கலந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். தற்போது படங்கள், விளம்பரங்களில் நடிப்பது, புரமோஷன் நிகழ்ச்சிகள் என விஜய் சேதுபதி பிஸியாகவே இருக்கிறார்.

முதன் முதலாக வெளியாகி உள்ள விஜய் சேதுபதி தந்தை புகைப்படம்:

இது ஒரு பக்கமிருக்க, இவருடைய குடும்ப புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அவருடைய குடும்ப புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் அப்பா புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. முதல் முறையாக வெளியாகி உள்ள விஜய் சேதுபதியின் அப்பா புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். பொதுவாகவே விஜய் சேதுபதிக்கு தன்னுடைய அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். இதை அவர் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் ஒரு முறை இவர் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது தன் அப்பாவை குறித்து உணர்ச்சி வசமாக சில விஷயங்களை பேசி இருந்தார்.

விஜய் சேதுபதி தன் தந்தை பற்றி சொன்னது:

அதில் அவர், என்னுடைய பெயர் விஜய் சேதுபதி கிடையாது. என்னுடைய பெயர் விஜயகுருநாத சேதுபதி காளை முத்து. சம்பாதித்த பணம், அறிவு அனைத்தும் மகனுக்கு போய் சேர வேண்டும் என்று நினைப்பது அப்பா தான். அவர்கள் சொன்ன அறிவுரைகள் நம் வாழ்க்கைக்கு எப்போதாவது உதவும். நான் ஒருமுறை சரக்கு அடித்துவிட்டு என் அப்பா போட்டோ முன்னாடி நின்னு திட்டி இருக்கேன். இப்போ நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு என் அப்பா தான் காரணம். ஆனால், இப்போ அவர் என் கூட இல்லைன்னு ரொம்ப பீல் பண்ணி இருக்கேன். இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஹீரோ என்றால் அவங்க அப்பா தான். என்னோட ஹீரோ என் அப்பா தான். அந்த மனுஷன் இல்லன்னா நான் இல்லை. அவரால் தான் நான் இங்கு இருக்கிறேன் என்று உணர்வுபூர்வமாக பேசி இருந்தார். இப்படி விஜய் சேதுபதி தன் அப்பாவை குறித்து பல மேடைகளில் பேசி இருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் கார்த்தி சாமிநாதன் இயக்கத்தில் முகிழ் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் மைக்கேல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல், சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர், ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் வசந்தகுமாரன், சங்குதேவன் இப்படி பல படங்களில் கமிட்டாகி விஜய் சேதுபதி பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full