முதல் முறையாக இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் விஜய் சேதுபதி.! எந்த படம் தெரியுமா.!

By Rajkumar · 12/3/2019

பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்கள் தான் பாகம் 1 2 3 என்று வெளியாகி உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்திய சினிமாவிலும் ஒரு சில படங்கள் இதுபோன்ற பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் வெளியான எந்திரன், விஸ்வரூபம், சிங்கம் ,சண்டக்கோழி, சாமி போன்ற பல படங்கள் இரண்டாம் பாகங்கள் வெளிவந்துள்ளது.

தற்போது கமல் இந்தியன் 2 பாகமும் உருவாகி வருகிறது. மேலும், சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னா நடித்த கண்ட நாள் முதல் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க : எனது படத்தால் 11 கோடி ரூபாய் இழந்துளேன்..!நடிகர் விஜய் சேதுபதி ஷாக்..! 

விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அருண்குமார் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும் பொறுப்பான குடும்பத் தலைவராகவும் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற பல படங்கள் வெளியாக இருக்கிறது. தமிழில் பல்வேறு பலர் நடித்த விஜய் சேதுபதி இதுவரை எந்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full