அஜித் படத்தையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி, இது நாள் வரை இந்த படத்தில் கவனித்தீர்களா ? இதோ வீடியோ.

By Rajkumar · 3/5/2023

முதன்முறையாக அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஏகே 62 படம்:

இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படம்:

மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட் வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் கூகுள் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த படத்தின் தலைப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

ஆழ்வார் படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படபிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதாவது, அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆழ்வார். இந்த படத்தில் அஜித், அசின், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் வரும் ஒரு காட்சி வீடியோ தான் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி வீடியோ:

அதில், போலீஸ் குற்றவாளியை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அப்போது கம்ப்யூட்டரில் அஜித்தின் புகைப்படத்திற்கு முன்பு விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது. இதுவரை இதை யாரும் கவனத்திருக்க மாட்டார்கள். தற்போது இந்த விஷயம் முதல் முறையாக ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full