சினிமா தான் எங்கள் கனவு, உதவுங்கள் - இளைஞர்களுக்கு விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை
விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க விஜய் சேதுபதி சினிமாவை தாண்டி சமூகத்தின் மீது அக்கறை உள்ள சில விஷயங்களை செய்து கொண்டு வருகிறார்.
அதோடு நல்ல செயல்களை செய்பவர்களையும் ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களை அழைத்து பாராட்டியும் வருகிறார். இந்த நிலையில் இரண்டு யூடியூபர்களை அழைத்து விஜய் சேதுபதி பாராட்டி பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ஆகி வருகிறது. அதாவது சிராஜ், அருண் என்ற இரண்டு இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 3500 கிலோ மீட்டரை சைக்கிள் மூலம் பயணித்து இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை எல்லாம் செய்திருக்கிறார்கள்.
விஜய் செய்த செயல்:
இவர்களை தான் விஜய் சேதுபதி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டி நல்லா பண்றீங்க என்று மனதார வாழ்த்தி அவர்களை அரவணைத்து முத்தமிட்டிருக்கிறார். பின் அந்த இளைஞர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரியாதை செய்து இருக்கிறார். அதோட இது 2002 வது மரக்கன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியானது. அதில் விஜய் சேதுபதி, அவர்களுக்கு பண உதவி செய்ய முன்வந்திருக்கிறார். உடனே அந்த இளைஞர்கள், எங்களுக்கு சினிமா தான் கனவு. அதற்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இளைனர்கள் கோரிக்கை:
பின் விஜய் சேதுபதி, நீங்க ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கணுமா? நான் உங்களை சேர்த்து படிக்க வைக்கிறேன். இல்ல வேறு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கடா தம்பி நான் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்து பலரும் விஜய் சேதுபதியின் செயலை பாராட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்தது.
விஜய் சேதுபதி குறித்த தகவல்:
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், யோகி இந்த சரவணன், ஆர்.கே சுரேஷ், அருள்தாஸ், ரோஷினி ஹரிப்பிரியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
விஜய் சேதுபதி படங்கள்:
இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இன்னும் சில படங்களில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.