பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா? என்னதாண்டா நடக்குது

By subhashini · 29/10/2025

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் இருந்து விஜய் சேதுபதி விலக இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 24 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார்.

பிக் பாஸ் 9:

பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் குறைவான வாக்குகளை பெற்று அப்சரா தான் வெளியேறி இருந்தார். பின் மூன்றாவது வாரம் ஆதிரை வெளியேறி இருந்தார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான்கு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேசன், சீரியல் நடிகர் பிரஜன், அமித் பார்கவ், சாண்ட்ரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்நிலையில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை விட்டு விஜய் சேதுபதி விலக இருக்கும் செய்தி தான் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வாரவாரம் கமலஹாசன் நிகழ்ச்சிக்கு வரும்போது போட்டியாளர்கள் மத்தியில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி வெளியே என்ன நடக்கிறது என்பதை சொல்லவே மாட்டார். ஆனால், விஜய் சேதுபதி அப்படியே உல்டாவாக செய்து கொண்டிருக்கிறார். வெளியே நடப்பதை சொல்லி போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டத்தை குழப்பி விடுகிறார். காமெடியாக வெளியே வைரல் ஆகுவதை கூட இவர் ஒரு வெளிப்படையாக போட்டியளர்கள் மத்தியில் சொல்வதால் அது சண்டை சச்சரவையில் போய் முடிகிறது.

விஜய் சேதுபதி விலகல்:

இதனால் இக்கட்டான சூழ்நிலையை கூட விஜய் சேதுபதியால் கையாள முடியவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் வருகிறது. இந்த முறை போட்டியாளர்கள் ரொம்ப மோசமாக நடந்து கொள்வதற்கு காரணம் விஜய் சேதுபதி தான் என்று கூறுகிறார்கள். தயவுசெய்து கமலஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கட்டும் என்றாலும் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை விட்டு விலகுவதாகவும் ஒரு செய்தி வருகிறது. இது உண்மையானால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலஹாசன் வருவாரா? இல்ல வேறு ஒரு நடிகர் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

behindtalkies AMP · Quick view
View full