'அந்த பொண்ணு இப்ப நெனெச்சாலும்' - தன் ரியல் லைப் 96 ஸ்டோரியை சொன்ன விஜய் சேதுபதி.

By Ajju · 28/7/2022

தன்னுடைய பள்ளிப் பருவ காதல் குறித்து மனம் திறந்து விஜய் சேதுபதி கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி இண்டர்நேஷனல் தயாரித்து இருந்தது.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இந்த படத்தில் கமல், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சமீபத்தில் நடித்து இருந்தார்.

விடுதலை படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தை இளையராஜா Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

விஜய் சேதுபதி அளித்த பேட்டி:

இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இப்படி வில்லன், ஹீரோ என மாசான கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி கலக்கி கொண்டிருக்கிறார் இந்நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஜானு என்கிற பெண்ணின் பின்னாடி சுமார் 4 வருடங்கள் சுற்றினேன். ஆனால், அந்தப் பெண்ணுக்கு கடைசி வரை இந்த விஷயம் தெரியாது. இப்போது கூட அது தெரியாமல் இருக்கலாம். அதன் பின் பல நாட்கள் அவரை நான் பார்க்கவே இல்லை. என் திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் என் தந்தையுடன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அந்த பெண் மாதிரி ஒரு பெண் நடந்து போனார். நான் வண்டியை திருப்பினேன். என் தந்தை ஏன்டா! என்று கேட்டார்.

பள்ளி பருவ காதல்:

அப்போ, நான் நான்கு வருடமாக சைட் அடித்த பெண் போகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னேன். அதன் பின் திரும்பி அவர்களை பார்க்க முடியவில்லை. இப்போது நான் திரும்பி பார்த்து விட வேண்டாம் என நினைக்கிறேன். அதைப் பற்றி நினைத்தால் அந்த பெண் அப்படியே ஸ்கூல் யூனிஃபார்மில் வர மாதிரியே என் கண்ணுக்குள் வரும். அது ஒரு அழகான விஷயம். அது அப்படியே இருக்கட்டும். அதை அழிக்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த படம் 96. இந்த படம் பலரின் பள்ளி பருவ காதலை நினைவுபடுத்தி இருந்தது. இதேபோல் விஜய் சேதுபதியின் வாழ்க்கையிலும் உண்மையான ஜானு என்ற ஒரு பெண் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full