2K கிட்ஸ்களின் இளம் கனவுக்கன்னியுடன் ஜோடியாக நடிக்க மறுத்துள்ள விஜய் சேதுபதி. எந்த நடிகை தெரியுமா ?

By subhashini · 23/9/2023

நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து முதன் முதலாக நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் செல்வனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுகிறது. குறிப்பாக, சொல்லவேண்டும் என்றால் விஜயின் மாஸ்டர், உலகநாயகன் கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இருந்தாலும், இவர் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்
இயக்குனர் வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

விடுதலை படம்:

இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகன் சூரி தான். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

விஜய் சேதுபதி அளித்த பேட்டி:

இதன் பின் தற்போது அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகிபாபு, உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். ஆனால், இந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து சில படங்களில் கமிட்டாகி விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி செட்டி உடன் விஜய் சேதுபதி நடிக்க மறுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி செட்டி உடன் நடிக்க மறுத்த காரணம்:

முதலில் விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி செட்டி இடம் தான் பட குழு பேசி இருந்தார்கள். ஆனால், விஜய் சேதுபதி நடிக்க மறுத்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக விஜய் சேதுபதி, உப்பென்னா படத்தில் நான் கீர்த்தியின் அப்பாவாக நடித்திருந்தேன். அப்பாவாக அவரிடம் நடித்திருக்கும் போது எப்படி என்னால் அதே பெண்ணுடன் ரொமான்ஸ் செய்ய முடியும். அதனால் தான் மறுத்துவிட்டேன். எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் . அவளுக்கு என் மகன் வயது இருக்கும். கீர்த்தியை என் மகளாகத்தான் நான் பார்த்தேன். என்னால் எப்போதும் அவருடன் ரொமான்டிக்காக நடிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full