விஜய் சேதுபதி மகனுக்கு நாமமா? பீனிக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா

By subhashini · 5/7/2025

பீனிக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பீனிக்ஸ். இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி இருக்கிறார். இவர் ஸ்டண்ட் மாஸ்டர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் பீனிக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, பீனிக்ஸ் படம் வெளிவந்த அன்று இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ என்ற படம் வெளியாகிவிட்டது. அதேபோல் சரத்குமார், தேவயானி, சித்தார்த் நடிப்பில் வெளியாகியிருந்த 3BHK படம் வெளியாகி இருக்கிறது.

வசூல் விவரம்:

இந்த மூன்று படங்களுமே போட்டி போட்டுக்கொண்டு ஓடி இருக்கிறது. அதில் முதல் நாள் வசூலில் பறந்து போ படம் 42 லட்சமும், 3BHK படம் ஒரு கோடியும் வசூலித்து இருக்கிறது. ஆனால், பீனிக்ஸ் படம் வெறும் பத்து லட்சம் தான் வசூல் இருக்கிறது. மற்ற படங்களை விட இந்த படம் படுமோசமாக வசூல் செய்து இருக்கிறது. வார இறுதியில் ஆவது இந்த படம் வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பீனிக்ஸ் பட கதை:

படத்தில் சூர்யா சேதுபதி சென்னை கடலோரப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் எம்எல்ஏ சம்பத்தை கொலை செய்து விடுகிறார். அப்போது சூர்யாவிற்கு 17 வயது என்பதால் அவரை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள். சம்பத்தின் மனைவிதான் வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய ஆட்களை வைத்து சூர்யா சேதுபதியை கொல்ல முயற்சி செய்கிறார். இதிலிருந்து சூர்யா தப்பித்தும் விடுகிறார். தொடர்ந்து வரலட்சுமி விடாமல் சூர்யாவை கொலை செய்ய முயற்சி கொண்டிருக்கிறார். இறுதியில் சூர்யா சேதுபதி கொலை செய்யப்பட்டாரா? எம்எல்ஏ சம்பத்தை சூர்யா கொலை செய்ய காரணம் என்ன? இந்த பிரச்சனைகளில் இருந்து சூர்யா தப்பித்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

பறந்து போ படம்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பறந்து போ. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, மிதுல் ராயன், அஞ்சலி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெறுகிறது.

3BHK படம்:

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 3BHK. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா, சைத்ரா ஜே. அச்சர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அம்ரித் இசையமைத்து இருக்கிறார். தினேஷ் பி கிருஷ்ணா, ஜிதின் ஆகியோர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full