எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை - அஜித் உடன் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி சொன்ன தகவல்

By subhashini · 17/2/2025

அஜித் குறித்து விஜய் சேதுபதி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது.

மேலும், இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ஆகும். சமீபத்தில் கூட இந்த படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் ஸ்ரீ உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.

விழாவில் விஜய் சேதுபதி:

இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் உட்பட பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் இவர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் விஜய் சேதுபதி, நிறைய இடத்தில் அஜித் சார் கூட சேர்ந்து நடிப்பதை பற்றி கேட்கிறார்கள்.
இதுவரைக்கும் நடந்த விஷயங்கள் எதுவும் திட்டமிட்டது கிடையாது.

அஜித் குறித்து சொன்னது:

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த விஷயம் நடந்திடும் என்று நினைக்கிறேன். இதற்கு முன்னாடி நடக்கிறதாக இருந்தது. அது நடக்காமல் போய்விட்டது. அதற்குப்பின் ஒரு மாணவி, ஏதாவது ஸ்கிரிப்ட் மிஸ் பண்ணி வருத்தப்பட்டு இருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி, நான் ஓகே பண்ணின கதையில் வேறு ஒருத்தர் நடித்திருக்கிறார். அதற்கு நான் வருத்தப்பட்டது இல்லை. இங்கு எவ்வளவு பெரிய வெற்றி கொடுத்தாலும் அடுத்து என்ன விஷயம் பண்றீங்கன்னு கேட்பார்கள்.

https://www.youtube.com/watch?v=3UgRr-Ia670

அஜித் விடாமுயற்சி:

ஒரு வெற்றியை வைத்து எதுவும் பண்ணப் போறதில்லை. நான், நானும் ரவுடிதான், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா போன்ற படங்களின் கதாபாத்திரங்களில் என்ஜாய் பண்ணி தான் பண்ணேன் என்று கூறியிருக்கிறார். கடைசியாக அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full