எனக்கும் பாருவுக்கும் செட் ஆகாது, பேசுவதற்கு ஒன்றும் இல்லை - மேடையில் விஜய் சேதுபதி கொடுத்த தக் லைப்

By subhashini · 26/3/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருக்கும் வெப் சீரிஸ் காட்டான். இதை ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கடைசி விவசாய பட இயக்குனர் மணிகண்டன் தான் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் பார்வதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுவது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, இந்த வெப் சீரிஸ்க்கு பின்னாடி நடந்த கதைகளை எடுத்தாலே இரண்டு மூணு பார்ட் போகும்.
இங்கு வந்த பிறகு தான் தெரியும். தமிழில் செய்கிற பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று எங்களுக்கு தெரிய வந்தது.

காட்டான் படம்:

பிரதீப் மில்ராய் பேசியே நம்மை மயக்கி விடுவார். அப்படித்தான் அவர் என்னிடம் வந்து பிக் பாஸ் பண்ண சொல்லி இருந்தார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. சிம்பு சார், சூர்யா சார் வைத்து பண்ணுங்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகும் அவர் என்னை வைத்து தான் பண்ணனும் என்று அடம் பிடித்தார். நான் இங்கு நிற்பதற்கு காரணம் பெரிதாக அறிமுகம் இல்லாத மனிதர்கள் வைத்த நம்பிக்கை தான் காரணம். எனக்கு என் மேல நம்பிக்கை இருந்தது கிடையாது.

விஜய் சேதுபதி சொன்னது:

ஒருவேளை வைத்திருந்தால் அது மற்றவர்கள் பாராட்டினதும் தான். அந்த விஷயம் எனக்கு தெரியும். நிறைய பேர் என்னை நம்பின பிறகு தான் நான் என்னை நம்ப ஆரம்பித்தேன். இயக்குனர் மணிகண்டன் எனக்கு ஷார்ட் பிலிம் மூலமாகத்தான் அறிமுகமானார். அப்போ என்னை நேரில் வந்து மீட் பண்ண சொன்னாங்க.
நான் போட்டோவில் தான் பார்க்கிற மாதிரி இருப்பன்னு அவரிடம் சொன்னேன். அன்று ஆரம்பித்த பயணம் இன்று இங்கு வரை தொடர்ந்து இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=lx6eoabsJlY

பார்வதி பற்றி சொன்னது:

அவர் ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிற விதமும் வித்தியாசமாக இருக்கும். அவர் எனக்கு கொடுத்த படத்திற்கும், பாடத்திற்கும் நன்றி. விஜே பார்வதி பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை. எனக்கும் பார்வதிக்கும் செட்டாகாது. அவங்க கிட்ட வாரம் வாரம் பேசி டயார்ட் ஆகிவிட்டேன். உங்களுக்கு பார்வதி மேல வருத்தம் இருக்கும். ஆனால், இந்த சீரிஸ் பார்த்ததும் அவரை உங்களுக்கு பிடிக்க ஆரம்பித்து விடும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full