வளர்த்துகிட்டே இருப்பது இல்ல புள்ள ஒரு கட்டத்தில் அவன் - நெகிழ்ச்சியில் தன் மகன் பற்றி விஜய் சேதுபதி சொன்னது

By subhashini · 28/6/2025

பீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனை அடுத்து சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனியாக ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘Pheonix வீழான்’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது.

பீனிக்ஸ் பட விழா:

இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, 2019 ஆம் ஆண்டு அனல் அரசு என்னிடம் ஒரு கதை சொன்னார். அதற்குப்பின் ரொம்ப நாள் கழித்து தான் அவரை பார்த்தேன். அப்போது என்னுடைய குடும்ப புகைப்படங்களை எல்லாம் காட்டினேன். அவருமே அவருடைய குடும்ப புகைப்படங்களை காட்டினார். அதற்கு பின்னர் ஜாவன் படப்பிடிப்பில் சந்தித்தோம். எனக்காக மகாராஜாவில் வந்து வேலை செய்திருந்தார். பின் அவர் என்னிடம் கதை சொன்ன பிறகு, நம்ம வீட்டிலும் அந்த வயசில் ஒரு பையன் இருக்கான். அவனைப் பற்றி கேட்கவில்லையே என்று தோன்றியது.

விழாவில் விஜய் சேதுபதி:

அதற்குப் பிறகு ஒருநாள் செட்டில், உங்கள் பையன் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என்று சொன்னார். அப்போது எனக்கு சந்தோஷம், பயம் இரண்டுமே இருந்தது. அப்பத்தான் சூர்யா காலேஜ் சேர்ந்திருந்தார். எப்படி பண்ணுவான்னு சந்தேகம் இருந்தது. ஆனால், என் பையனுடைய முடிவுகளை அவனே தான் எடுக்கணும் என்று நினைத்தேன். சிந்துபாத் படம் நடிக்கும் போதும் அவனுக்கு 14 வயது. அப்போது அவன் பழக வேண்டும் என்பதற்காக ஏர்போர்ட் மாதிரி இடங்களில் தனியாக விட்டேன். அப்போது அவனே வந்து, அப்பா நான் இன்னும் வளரல. என்னை தனியாக விடாதே என்று சொன்னார். இப்போ இந்த விஷயத்தை அவனே கையாளனும் நினைத்தேன். அவனே தான் மாஸ்டரிடம் கதை கேட்டான். என் தொழில் சினிமா தான். அதைப் பற்றி நான் குழந்தைகளிடம் அதிகம் பேசுவேன்.

https://www.youtube.com/watch?v=U8kTNtPz_Kw

மகன் பற்றி சொன்னது:

மனித மனமும் மூளையும் எப்படி வேலை செய்வது என்பதை அந்த வழியாகத்தான் என் குழந்தைகளுக்கு சொல்ல முடியும். சொல்லிக் கொடுப்பது என்பதை தாண்டி அவர்கள் கருத்தையும் கேட்பேன். எங்கள் விவாதம் ஜனநாயக முறையில்தான் இருக்கும். வளர்ந்துக்கிட்டே இருக்கிறது இல்ல புள்ள, ஒரு கட்டத்தில் அதுவே வளரனும் நினைத்தேன். அதனால்தான் இந்த படத்தின் பூஜையில் இருந்து எதிலும் நான் தலையிடவில்லை. மொத்த ஷூட்டிங்கிலும் ஒரே ஒருமுறைதான் நான் போனேன். அவனிடம் நீ என்ஜாய் பண்றியான்னு கேட்டேன், அவனும் பண்ணுறேன் என்று சொன்னான். அவன் விஷயங்களை அவனே பார்த்துப்பான். அதில் எந்த கவலையும் இல்லை. வாழ்த்து பேசிய எல்லோருமே மனதார வாழ்த்தி இருந்திர்கள் ரொம்ப நன்றி.

நெகிழ்ச்சியில் விஜய் சேதுபதி:

அனல் அரசு மாஸ்டர் பேச்சு அரசியல்வாதி பேசியது போலவே இருந்தது. தேவதர்ஷினிக்கும் அவங்க கணவருக்கும் நான் பெரிய ரசிகன். நீங்கள் உங்கள் மகனாக பார்த்து வளர்த்தியது பெரிய விஷயம். படம் நன்றாக வந்திருக்கிறது. அவனை முதல் முறை ஸ்கூலில் சேர்த்து விட்ட மாதிரி ஒரு உணர்வு இருக்கிறது. பக்கத்தில் தான் என்னுடைய முதல் பட ஆடியோ லான்ச் நடந்தது. அப்போது நான் படப்படபாக இருந்தேன். இப்போது அதைவிட படபடப்பாக இருக்கிறேன். ஆனாலும், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என்னை விட என் மனைவி தான் ரொம்ப சந்தோஷம். அவளுக்கும் சேர்த்து நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full