எனக்கும் இயக்குனருக்கும் செட் ஆகல, இந்த படத்தில் நடிக்க வேண்டாம்ன்னு இருந்தேன் - விஜய் சேதுபதி ஒபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், பவானி மேனன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி குறித்த தகவல்:
இதை தொடர்ந்து தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஏஸ்(ace). இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கன்னட நடிகை நடிகை ருக்மணி வசந்த், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
தலைவன் தலைவி படம்:
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார் இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, சரவணன், ஆர்.கே சுரேஷ், அருள்தாஸ், ரோஷினி ஹரிப்பிரியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. வருகிற 25-ம் தேதி தான் இந்த படம் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=MCn4mQ-2t68
செய்தியாளர் சந்திப்பு:
இப்படி இருக்கும் நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, என்னுடைய இயக்குனர் பாண்டிராஜுக்கும் எனக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. ஆனால், படம் ஆரம்பித்தபோது எங்கள் இருவருக்கும் இடையிலே சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருந்தது. அவர், என்னை வைத்து படம் இயக்கக் கூடாது என்றும், அவருடைய இயக்கத்தில் இனிமேல் ஒரு படத்தில் கூட நடிக்க கூடாது என்று நானும் நினைத்த நேரம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது எங்கள் இருவருக்கும் இடையில் எப்படி கோபம் குறைந்தது? அன்பு, பாசம் எப்படி வந்தது? என்று தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=TUEQl6bed9Y
விஜய் சேதுபதி சொன்னது:
ஒரு சிறிய பூ எப்படி மலருமோ அப்படித்தான் எங்களுக்கு இடையிலான கோபமும் மறைந்து அன்பு மலர்ந்தது. இயக்குனர் பாண்டிராஜை 2009 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு தெரியும். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது வாங்கிய போது தான் நாங்கள் இருவருமே சந்தித்து பேசினோம். மூன்றாம் பிறை படத்தின் மூலமாக அறிமுகமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நானும் இணைந்து பணியாற்றியது நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஒரு படத்தில் தான் நித்யா மேனனுடன் சேர்ந்து நடித்திருந்தேன். தலைவன் தலைவி படத்தில் இப்படி ஒரு காம்பினேஷனா என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களுக்குமே புரியும். அவரை தவிர வேறு யாருமே அந்த ரோரில் கச்சிதமாக நடிக்க முடியாது.
இந்த படம் கண்டிப்பாக மக்கள் எல்லோருக்குமே பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.