'வாழ்வளிக்க வந்த வாள்' - வீடியோவை பகிர்ந்து கர்ணன் படம் பற்றி விஜய் சேதுபதி போட்ட பதிவு.

By Rajkumar · 10/4/2021

கர்ணன் படத்தை பற்றி விஜய் சேதுபதி போட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

https://twitter.com/VijaySethuOffl/status/1380765401450127361

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி நிறைவடைந்த கையோடு அஸ்வினை அலேக்காக தூக்கிய வேறு ஒரு தொலைக்காட்சி.

சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதே போல பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேத்துபதியும் இந்த படத்தை பற்றி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

வாழ்வளிக்க வந்த வாள், வாழ்வழிக்க வந்தவள் என்ற கர்ணன் படத்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, கர்ணன் சிறந்த படம், மிஸ் பண்ணிடாதீங்க என்றும் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த ட்வீட் ரசிகர்கள் பலரும் பகிரப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full