ஹீரோவாவதற்கு விஜய் சேதுபதி துணை நடிகராக தலை காண்பித்த படங்களின் லிஸ்ட் - புகைப்படங்கள் இதோ.

By Rajkumar · 14/7/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். அந்த அளவிற்கு அவருடைய எதார்த்தமான நடிப்பும், கதைகளும் உள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று தமிழ் சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

https://www.instagram.com/p/CCnCI4wJCpd/

அதற்கு முழு காரணம் அவரின் உழைப்பு மட்டும் தான். ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், ஹீரோவாவதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த படத்தின் லிஸ்ட் இது.

behindtalkies AMP · Quick view
View full