அசுரன் படத்தில் தனுஷுக்கு வில்லன் விஜய் சேதுபதியா.! படக்குழு அறிவிப்பு இதோ.!

By Rajkumar · 5/5/2019

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி பலரின் பேவரைட் நடிகராக விளங்கி வருகிறார். விஜய் சேதுபதி சூது கவ்வும், செக்க சிவந்த வானம், பேட்ட என்று பல மல்டி ஸ்டார் படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த மல்டி ஸ்டார் படங்கள் அனைத்தும் வெற்றியும் பெற்றது.

அதே போல தற்போது தெலுங்கிலும் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுகு மல்டி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்ப இருப்பதாக பரவலாக செய்திகள் வெளியானது.

வெற்றி மாறன் இயக்கி வரும் இந்த படத்தை தாணு தயாரித்து வருகிறார். மேலும், இப்படத்தில் மஞ்சு வாரியர், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் தனுஷுடன் நடித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை படக்குழு மறுத்துள்ளது.

இது தொடர்பாக படக்குழுவினர் “எப்படி இச்செய்தி வெளியானது என்றே தெரியவில்லை. இதில் உண்மையில்லை. அப்படியொரு பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை” என்று தெரிவித்தனர். மேலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த படத்தை பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full