எனது படத்தால் 11 கோடி ரூபாய் இழந்துளேன்..!நடிகர் விஜய் சேதுபதி ஷாக்..!

By Rajkumar · 21/12/2018

தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். விஜய் சேதுபதி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இதனால் அவரது படங்கள் தயாரிப்பாளர்கள் கையை சுடாமல் லாபம் பார்த்து கொடுக்கின்றன.

சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 'சீதக்காதி' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், 96 படம் வெளியானபோது பண நெருக்கடியில் சிக்கி படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் தயாரிப்பாளருக்கு ரூ.4 கோடி கொடுத்து படம் திரைக்கு வர உதவியதாக கூறப்பட்டது. இதுபோல் மேலும் சில பிரச்சினைகளில் பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “இந்த வருடம் பண ரீதியாக நான் பெரிய பின்னடைவை சந்திதேன். அதாவது ரூ.11 கோடியை இழந்து இருக்கிறேன். அதற்கான காரணங்கள் என்னவென்று எனக்கே தெளிவாக புரியாமல் இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது ரஜினிகாந்துடன் பேட்ட, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த வருடத்தில் 96 பெரிய வெற்றி படமாக அமைந்தது’ என்றார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full