96 வெற்றி விழாவில் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி.! ஆத்தாடி எத்தன.!

By Rajkumar · 5/2/2019

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான '96' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த ஆண்டின் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக மே 16 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குனர் சேரன், மித்ரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத் போன்ற படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full