பஞ்சாயத்துன்னு போன படத்துல வெச்சு செஞ்சிடுவாங்க- பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தவர் மரியா இளஞ்செழியன். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹேப்பி ராஜ். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி பிரியா, அப்பாஸ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த படம் மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, முதலில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் குமரன் சாருக்கும் அவருடைய அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால், நமக்கு இதெல்லாம் செட்டாகாது. ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து அதற்கு தீர்ப்பு வழங்க போய் நம்ம படத்தை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம்தான் அதிகமாக இருக்கு.
ஹேப்பி ராஜ் படம்:
பொறுப்பு கொடுத்தால் அந்த பொறுப்பை பொறுப்பாக செய்ய வேண்டும். அதை செய்வதால் ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று நினைத்தால் எப்படி? மற்றபடி வெற்றி பெற்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பியான்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன். எந்த தயாரிப்பாளர் புதிதாக வந்தாலும் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். சினிமா என்பது ஒரு அற்புதமான தொழில். யார் என்ன சொன்னாலும் பயப்படவே பயப்படாதீர்கள். இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
விஜய் சேதுபதி பேசியது:
தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும் ஸ்கிரிப்டையும் படித்தால் நன்றாக இருக்கும். படியுங்கள் நிறைய படம் பண்ணுங்கள். இந்த படத்தில் மரியாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஜி வி நன்றாக பாட்டு போடுவார். ஆனால், ஜஸ்டின் உடன் சேர்ந்து இரண்டாவது முறை இணைந்து பணியாற்றி இருக்கிறார். ஜஸ்டின் எனக்கு ரொம்ப நெருக்கமான நபர். பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து எங்களுக்குள் பழக்கம். அவன் மீது அன்பும் மரியாதையும் எனக்கு இருக்கிறது. சமீபத்தில் அவருடைய சர்வம் மாயா, சிறை போன்ற படங்களெல்லாம் ஹிட்டாகி இருந்தது.
https://www.youtube.com/watch?v=tVdKABIG8aw
படம் பற்றி சொன்னது:
அவன் எந்த உயரத்தை அடைய வேண்டும் என நினைக்கிறானோ அதை நோக்கி பயணிக்கிறான். படத்தின் டிரைலர் ரொம்ப ஜாலியாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. ஜி.வி எப்போதுமே ஸ்கூல் பையனாக நடிக்கலாம். அப்படித்தான் இருக்கிறார். 90ஸ், ஜென்சி, இன்னும் 50 வருடம் கழித்து படம் எடுத்தால் கூட ஜிவி ஸ்கூல் பையனாகவே நடிப்பார். ரொம்ப நன்றாக இருந்தது. எல்லோருக்குமே என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.