தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் ஒரு படத்தை பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று விமர்சிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார். மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் லாபம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும், இந்த படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தி உள்ளது படக்குழு. அதில் விஜய் சேதுபதி அவர்கள் கூறியது, நான் நான்கு படங்களை தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் இல்லை. ஏனெனில் அதை தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டினால் என்னுள் இருக்கும் கலை அழிந்து விடும் என்ற பயம் எனக்கு இருக்கிறது. மேலும், தொழில் பலவீனம் அடைந்தால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

Advertisement

இந்த திரைப்படம் நல்லபடியாக வெளியாகவேண்டும். இந்த படம் மக்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜனநாதன் சார் ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்கு என்று சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லை கடந்து பார்வையாளர்களை ஏதோ ஒரு விஷயத்தில் சிந்திக்க தூண்டும். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை திரைப்படத்தை பார்க்கும் கோணம் மாறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் காட்சிகள் என்னை யோசிக்க வைத்து உள்ளது. திரைப்படம் ஏதோ ஒரு வகையில் நம்முள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனால் திரைப்படம் சாதாரண பொழுது போக்காக மட்டுமில்லாமல் அதை கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது.

மேலும், கலையை சாதாரண பொழுதுபோக்கு அம்சங்கள் கோணத்தில் அணுகாதீர்கள். கலை என்பது சிந்திக்க வைப்பது. அதனால் தான் நான் இந்த துறையில் நுழைந்தேன். இதை தான் நான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தை பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று யாரும் விமர்சிக்காதீர்கள். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது. அதனால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அது இன்றும் உயிருடன் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement
Advertisement