மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் எடுத்த selfie - ட்விட்டரில் செய்த சாதனை- ட்விட்டர் நிறுவனமே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

By Rajkumar · 8/12/2020

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளிவதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இருப்பினும் இந்த படம் தீபாவளிக்காகவாது வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், 50 சதவீத பார்வையாளர்களை வைத்து இந்த படத்தை வெளியிட விரும்பாததால் இந்த படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/actorvijay/status/1226863840513515520

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்க்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், சில அரசியல் கட்சியினர் அங்கே போராட்டம் நடத்தியதால் விஜய்யின் படப்பிடிப்புகள் கூட நிறுத்தப்பட்டது. ஆனால், படப்பிடிப்பில் ரசிகர்களின் கூட்டமும் அலைமோதியது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் வேன் மீது ஏறி கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது .

https://twitter.com/TwitterIndia/status/1336204880554254336

தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுட்ரெண்டிங் செய்த்தனர் . இதை ரசிகர்கள் #ThalapathyVijaySelfie என்ற ஹேர்டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் விஜய் எடுத்த செல்பி ஒன்று கூட செம்ம வைரல் ஆனது, இப்படி ஒரு நிலையில் , 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிட்டுள்ளது . இது தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

behindtalkies AMP · Quick view
View full