விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோயின் இவர் தானா - வெளியான அதிரடி அப்டேட்

By subhashini · 27/3/2025

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருக்கிறது. தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் சஞ்சய் நடித்து உள்ளார். பின் ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு இருந்தார். அதோடு இவர் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற சில குறும்படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம்:

அதன் பின் இவர் இறுதியாக ‘Pull The Trigger’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படம் சஞ்சய் இயக்கிய மற்ற குறும்படத்தை விட நன்றாகவே இருந்ததது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

லைகா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1, 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து இருக்கிறது. இப்படி முதல் படத்திலேயே லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சஞ்சய் கைகோர்த்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் தான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

படத்தின் ஹீரோயின் அப்டேட்:

சென்னையில் உள்ள கோபுரம் ஸ்டுடியோவில் தான் இந்த படத்தினுடைய சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தினுடைய ஹீரோயினி குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். இவர் தான் சந்தீப் கிஷனுக்கு ஜோடி. தற்போது சந்தீப் கிஷனுடைய காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபரியா அப்துல்லா குறித்த தகவல்:

தெலுங்கு மொழியில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஜாதி ரத்னலு படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் ஃபரியா அப்துல்லா. இதை அடுத்து இவர் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருந்த வள்ளி மயில் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை சுசீந்திரன் தான் இருக்கிறார். ஆனால், அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோயினியாக கமிட்டாகி இருக்கிறார். இந்த படம் ஹிட்டானால் இவர் தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full