விஜய் 63யில் விஜய் மகன் நடிக்கிறாரா.! ஆதாரம் இந்த புகைப்படம் தான் .!

By Rajkumar · 13/6/2019

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரபட்டாளங்களும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் விஜய் 63 படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதற்கு முக்கிய கரணமே சமீபத்தில் சஞ்சீவ் மைக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தின் கீழ் விஜய் 63 என்ற ஹேஷ் டேக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, விஜய் 63 யில் சஞ்சீவ் நடிக்கிறாரா இல்லை ஏகாவது டப்பிங் பேசுகிறாரா என்று குழப்பமாக உள்ளது. அதே போல சஞ்சீவ் ஏற்கனவே குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். எனவே, இந்த புகைப்படம் எதாவது குறும்படத்தின் போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும், சஞ்சய் ஏற்கன்வே விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடமடியிருந்தார். மேலும், விஜய் மகளான திவ்யா ஷாஷா விஜய் நடித்த தெறி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full