Cg ,கயிறு போன்றவை இல்லாமலேயே விஜய் ஸ்டண்ட் செய்தவர்..!பிரபல சண்டை இயக்குனர் வியப்பு..!

By Rajkumar · 24/12/2018

இளைய தளபதி விஜய் நடிப்பு, நடனம், ஸ்டண்ட் என்று அனைத்திலும் கெட்டிக்கறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரு சில படங்களுக்கு டூப் ஏதும் போடாமல் அவரே செய்து அசத்தியுள்ளார்.

ஆனால், இதுபோன்ற அசாதாரணமான காட்சிகளை விஜய் ஆரம்பகால கட்டத்தில் இருந்தே செய்து வந்துள்ளதாக விஜய்யின் பல்வேறு படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா கூறியுள்ளார்.

விஜய்யுடனான படங்களில் மறக்க முடியாதது, காதலுக்கு மரியாதை. இரவு நேரத்தில் ஒரு சண்டைக்காட்சி எடுத்திருப்போம். ஒரு முக்கியமான காட்சி, ஒரு ஃபைட்டர் கீழே குதிப்பார், அவருடனே விஜய்யும் குதிக்க வேண்டும்.

அப்போ இப்போது உள்ளது போல CG இல்லாததால் ரோப் யூஸ் பன்ன முடியாது, விஜய் மெத்தை, டூப் என எதையும் யூஸ் பண்ணமால் முன்பக்கமாக சுழன்று அந்த ஃபைட்டர் மீது விழுவார் அந்த கட்சியை நினைத்தால் இப்போதும் வியப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சிவா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full