விஜய் Uncle என்ன பாக்க வரவே மாட்டீங்களா ? பாவமாக கேட்ட குட்டி, சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.
பிரமாண்டமாக உருவாகிவரும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் தன்னுடைய ரசிகையிடம் வீடியோ கால் செய்து பேசியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வருகின்றனர் அதற்கான வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்து வரும் அப்டேட் :
தொடர்ந்து படப்பிடிப்பு பற்றிய சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் கூட விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக அசத்திய வசந்தி காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார். அது தொடர்பான விடியோக்கள் ஷோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் கெளதம் மேனன் மற்றும் மிஸ்கின் என இருவரின் படப்பிடிப்பு காட்சிகளும் நிறைவடைந்தது சென்னை திரும்பியிருந்த்ன
இந்நிலையில் விஜய் நடித்துவரும் லியோ படம் காந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஸ்மீரில் ஏறக்குறைய படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இதனால் வரும் மாதங்களில் சென்னையில் அடுத்தகட்ட ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லியோ படத்தில் விஜய் வைத்துள்ள ஹேர் ஸ்டையில் செட் ஆக 30க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டையில் களை வைத்து பார்த்த பின்னர் தான் தற்போது விஜய் வைத்துள்ள ஹேர் ஸ்டைல் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
என்ன விஜய் அங்கிள் வரமாட்டீங்களான்னு கேட்ட குழந்தையிடம் விடியோ காலில் பேசி நலம் விசாரித்த @actorvijay 🥰 pic.twitter.com/Py9H0eTzSE
— Sonia Arunkumar (@rajakumaari) March 31, 2023
இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு தொடங்கிய முதலே விஜய் பற்றிய பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. குறிப்பாக சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் தோசை சூட்டு சாப்பிடும் பழைய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகியது. அதனை தொடர்ந்து தான் தற்போது மீண்டும் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்குகள் குவிந்து வருகிறது.
அதாவது பல்லவரத்தை சேர்த்த ஒரு குழந்தை தன்னுடைய அம்மாவிடம் விஜய் அங்கிளை பார்க்க வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறது. மேலும் விஜய் இங்கே வரமாட்டாரா என்று கேட்கிறது எந்த குழந்தை. இதனை அறிந்த விஜய் ரசிகருக்கு வீடியோ கால் செய்த விஜய் அந்த குழந்தையுடன் நலம் விசாரித்து கொஞ்சி கொஞ்சி பேசினார். அதோடு அந்த சுட்டிக் குழந்தையும் தன்னுடைய மழலை தமிழில் அழகாக பேசியது. இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.