அவன் மாறிட்டே இருப்பான் அவனை மகனை நம்பவே முடியாது - மகனை பற்றி வெளிப்படையாக பேசிய தளபதி. Cute Thorowback video
தன்னுடைய மகன் குறித்து விஜய் பேசியிருந்த பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் முதன் முதலாக வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதற்குப் பிறகு இவர் தன்னுடைய தந்தை இயக்கிய சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் விடாமுயற்சியுடன் விஜய் போராடி இருந்தார். அதற்குப்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மாஸ் காட்டி இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை தூணாக விஜய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது.
விஜய் திரைப்பயணம்:
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மேனன், அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது. மேலும், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் அரசியல்:
இந்த படம் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இந்த படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் அரசியலில் முழு தீவிரமாக இறங்க இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்திருந்தார். இதனால் முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலக இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்:
அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் நிற்க இருப்பதாக கூறியதிலிருந்து அரசியல் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இவர் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய் பேசிய வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் விஜய் பேசி இருக்கும் பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் உங்களுடைய மகன் சினிமாவில் யாருடைய ரசிகர்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய், என்னுடைய மகன் சஞ்சய் அப்பப்ப மாறிக்கொண்டே இருப்பார். அன்றைய தேதிக்கு எந்த படம் ஹிட்டோ அதற்கு ஏற்ற மாதிரி மாறிவிடுவார். திடீரென்று சூர்யா ரசிகன் என்று சொல்லுவான். அடுத்த வாரம் ஆர்யா ரசிகன் என்று சொல்வான். அவனை நம்பவே முடியாது என்று கலகலப்பாக பேசி இருக்கிறார்.