தனது பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த உதவி - கைப்பட கடிதம் எழுதி விஜய் நெகிழ்ச்சி.

By subhashini · 1/7/2023

தன்னுடைய ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதி இருக்கும் கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.. அதுமட்டும் இல்லாமல் விஜய் தன்னுடைய ரசிகர்களை அடிக்கடி சந்தித்து இருந்தது எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், விஜயின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

விருது விழா:

இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

விஜய் பிறந்தநாளில் செய்த நல உதவிகள்:

இதனை அடுத்து கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருந்தது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் விஜய் பிறந்தநாளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. மேலும், விஜய் பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த
ஈசி.ஆர். சரவணன் வழங்கி இருந்தார்.

விஜய் எழுதிய கடிதம்:

இந்நிலையில் நல திட்ட உதவியினை செய்த சரவணனை பாராட்டி விஜய் அவர்கள் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அதில் அவர், கடந்த ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக தாங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தேன். தங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விஜய் அந்த கடிதத்தில் கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full