ஐபிஎல் நேரத்தில் பிரம்மாண்ட மைதானத்திற்கு வரப்போகும் விஜய்.! ஆதாரம் இதோ.!

By Rajkumar · 8/4/2019

நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.

https://twitter.com/AMathiyarasan/status/1115074643310796801

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதையாக இருக்கும் என்றும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.
இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக அமைப்பாட்டிற்கும் செட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாபெரும் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் கால்பந்து கதை என்பது ஏற்கனவே வெளியான செய்தியாகும், என்வே, தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கால்பந்து போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full