தளபதி எடுத்துக்கொடுத்த செருப்பு ரசிகருடையது கிடையாது - அது யாருடையது தெரியுமா ?

By Rajkumar · 26/9/2020

தமிழ் சினிமாவில் உச்ச நாட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரை சினிமாவில் பெரிய ஸ்டார் நடிகராக இருந்தாலும் நிஜத்தில் மிகவும் எளிமையான மனிதர் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். அதனை உறுதி செய்துள்ளது இந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் நேற்று காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=z6Gvj-DYa-4

கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர். பாடகர் எஸ் பி பாடகர் என்பதையும் தாண்டி. கேளடி கண்மணி, குனா, திருடா திருடா, காதலன், அவ்வை ஷண்முகி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். அதே போல விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'பிரியமானவளே' படத்தில் கூட விஜய்யின் அப்பாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யூத் படத்தில் 'சந்தோசம்' பாடலை கூட எஸ் பி பி பாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய், எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. விஜய் சென்றதால் அங்கே ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தனர். இதனால் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

https://www.youtube.com/watch?v=Pjeq_nJL4QE

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் தனது செருப்பை தரவவிட்டார். அதனை எடுக்க அவர் முயன்ற போது நடிகர் விஜய் சற்றும் யோசிக்காமல் கீழே குனிந்து அந்த செருப்பை எடுத்து அந்த நபரிடம் கொடுத்தார். உண்மையில் அது அங்கே இருந்த மீடியா நபரின் காலனி தான். அவர் தான் கூட்ட நெரிசலில் செருப்பை தவற விட்டார் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full