என் மகள் பிறந்த நாளில் எத்தன விசேஷங்கள் தெரியுமா? அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன் பகிர்ந்த தகவல்

By subhashini · 13/5/2025

குழந்தை பிறந்த பிறகு விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும், பெரும்பாலும் இவர் நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். லேடிஸ் நாஞ்சில் விஜயனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருந்தார். அதன் பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் விஜயன் நடித்திருந்தார்.
அதன் பின் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்.

நாஞ்சில் விஜயன் திருமணம்:

மேலும், இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதிலும் இவர் சில குறும்படங்களில் கூட நடித்து இருந்தார். இதனிடையே நாஞ்சில் விஜயன், மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய திருமண வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இவரின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் நாஞ்சில் விஜயன், தன் மனைவி மரியா கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

நாஞ்சில் விஜயன் குழந்தை:

அதன்பின் சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பை நடத்தி இருந்தார். அதில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். பின் நேற்று நாஞ்சில் விஜயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தன் மகளை கையில் ஏந்தியவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார் நாஞ்சில் விஜயன். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=mNqyJvGZw0o

நாஞ்சில் விஜயன் பேட்டி:

இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு நாஞ்சில் விஜயன் அளித்த பேட்டியில், இந்த தருணத்தை நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்தேன். நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இதனால் கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனால், நல்லபடியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆப்ரேஷன் பண்ணி குழந்தையை கையில் கொடுத்தார்கள். பெண் குழந்தை தான் வேண்டும் என்று எதிர்பார்த்தேன். இதை நான் சும்மா ஃபார்மால்டிக்காக சொல்லவில்லை.

https://www.youtube.com/watch?v=znpuRMfjpak

மகள் பற்றி சொன்னது:

பொதுவாகவே அதிக அப்பாக்கள் முதல் பிரசவம் என்றால் பெண் குழந்தையை தான் எதிர்பார்ப்பார்கள். மரியாவை கேட்டால் என் விருப்பம் தான் அவள் விருப்பம் என்று சொல்வாள். அதனால் பெண் குழந்தை வந்ததில் குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறோம். அதுவும் போக என் பொண்ணு வந்த நாள் சாதாரண நாளில்லை. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கின நாள், பௌர்ணமியில் விசேஷமான சித்ரா பௌர்ணமி, இன்னொரு முக்கியமான விசேஷம் புத்தர் பூர்ணிமா. அதோடு தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் இதுதான். எத்தனை சம்பவங்கள் பாருங்க, அதனால் இது இரட்டிப்பு சந்தோஷம் கிடையாது. டபுள் இரட்டிப்பு என்று சந்தோஷத்தில் கூறியிருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full