குடிபோதையில் கார் விபத்தா..? நடுரோட்டில் Jodi No 1 நடிகைக்கு நடத்த சோகம் ..! புகைப்படம் உள்ளே

By Ajju · 1/6/2018
விஜய் டிவியில் பிரபல நடன நிகழ்ச்சிகளாக "ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் " போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா. சில நாட்களுக்கு முன்னர் இவர் குடி போதையில் காரை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகின. ஆனால் நான் காரை ஓட்டவே இல்லை என்று சுனிதா கூறியுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஜோடி" நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறைபோட்டியாளராக பங்குபெற்று வந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தனுஷ் நடித்த "3" படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து பேசிய சுனிதா "எனக்கு முதலில் குடிக்கும் பழக்கமே கிடையாது, அதுமட்டுமல்லாமல் விபத்து நடந்த பொது நான் காரின் பின் புறம் தூங்கி கொண்டு இருந்தேன். அதனால் காரை என்னுடைய டிரைவர் தான் ஓட்டினார்.அதுமட்டும் இன்றி என்னுடைய டிரைவர் குடித்திருக்கிறாரா என்று பார்ப்பேன். இல்லை என்றால் மட்டுமே காரை ஓட்ட அனுமதிப்பேன். அவர் தான் அந்த விபத்தை ஏற்படுத்தினார் அவர் செய்தது தவறுதான். அங்கிருந்தவர்கள் நான் தான் குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்தினேன் என்று நினைத்துவிட்டனர். ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாததால் எனக்கு அங்கு இருந்தவர்ககளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் என்னை தவறாக நினைத்துக் கொண்டாரகள் என்று மட்டும் எனக்கு புரிந்தது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full