மீடியா துறையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ரியதர்ஷினி. இவர் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் ‘தாவணிக் கனவுகள், இதய கோயில்’ மற்றும் மலையாளத்தில் ‘சுப யாத்ரா’ ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்திருந்தார் ப்ரியதர்ஷினி. இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் ப்ரியதர்ஷினி.

அதன் பிறகு ‘ஜித்தன்’ ரமேஷின் ‘புலி வருது’, பரத்தின் ‘காளிதாஸ்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் நடித்தார். இதில் ‘காளிதாஸ்’ படத்தினை அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் ப்ரியதர்ஷினி மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. திரைப்படங்கள் மட்டுமின்றி ‘அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன்’ என பல டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.

Advertisement

தற்போது, ‘ஹாட் & கூல் மீடியா’ என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி. தொடர்ந்து நடித்து வந்த பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் பிரியதர்ஷினி. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.

விரைவில் சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சிங்கப் பெண்ணே என்ற புதிய சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அதே போல விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலிலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

Advertisement
Advertisement