புகைப்படத்தில் இருக்கும் இந்த பாப்பா பிரபல தொகுப்பாளினியா..? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

By Ajju · 14/9/2018
விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். [embed]https://www.instagram.com/p/Bnn81nfA9Ms/?taken-by=vijaytelevision[/embed] விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர். தற்போது விஜய் டிவியில் குழந்தைகள் பங்கு பெற்று வரும் “சூப்பர் சிங்கர்” என்ற பாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்று வருகிறார். தற்போது இவர் தான் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். [embed]https://www.instagram.com/p/Bm71rEyDBcG/?taken-by=priyankapdeshpande[/embed] இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொகுப்பாளினி பிரியங்காவின் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, புகைப்படத்தில் இருப்பது யார் என்று ட்வீட் செய்துள்ளனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full