ஆரம்ப காலத்தில் சுட்டி டிவியில் வேலை செய்துள்ள பிரியங்கா - எப்படி இருந்திருக்கார் பாருங்க.

By Rajkumar · 9/4/2021

விஜய் டிவியில் பல பெண்கள் தொகுப்பாளர்களாக இருந்து உள்ளார்கள். ஆனால், எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அந்த வகையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. ஒவ்வொரு தொகுப்பாளர்கள் தங்கள் ஸ்டைலில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அந்த வகையில் தொகுப்பாளனி ப்ரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கம் ஸ்டைலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரை வைத்து பல பேர் காமெடி செய்தாலும், கிண்டல், கேலி செய்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரேஞ்சில் மிகவும் ஜாலியாக எடுத்து கொண்டு போவார். இவர் 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

ப்ரியங்கா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று வருகிறார். மேலும், இவரின் சிரிப்புக்கு என்றே ரசிகர்கர்கள் படை உள்ளது. தொகுப்பாளினியாக அறிமுகமான கொஞ்ச காலங்களிலேயே பிரியங்கா மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.இவருடைய காமெடியான பேச்சு, கலகலப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பலரையும் கவர்ந்தது. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர்.

தற்போது விஜய் டிவியின் சீனியர் தொகுப்பிளானிகளான டிடி, பாவனா, ரம்யாவை விட தற்போது இவர் தான் பெருமபாலான விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். என்னதான் இவர் விஜய் டிவி மூலம் பிரபலமானாலும் ஆரம்ப காலத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் தான் பணியாற்றினர். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்தியா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியும் இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full