ஒவ்வொரு எபிசோடுக்கும் லட்சத்தில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் - யாருக்கு அதிகம் தெரியுமா?

By subhashini · 19/6/2025

விஜய் டிவி தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக மக்களினுடைய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை திகழ்கிறது. சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல ரியால்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே டிஆர்பி ரேட்டிங்க்காக வித்தியாசமான கதைகளத்துடன் சீரியல்களையும் புதுப்புது கான்செப்டில் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் விஜய் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். அந்த அளவுக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார்கள். அதோடு ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் கிங் என்று விஜய் டிவியை தான் அழைக்கிறார்கள்.

விஜய் டிவி தொகுப்பாளர்கள்:

அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக டிடி, கோபிநாத், ரம்யா, பாவனா, பிரியங்கா, மாகாபா ஆனந்த், மகேஷ், ரக்சன், ஜாக்லின் என பல பேர் சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் கூட சில புது தொகுப்பாளர்களுமே விஜய் டிவியில் களம் இறங்கி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வருகிறது.

ரக்சன்:

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ரக்சன். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு சினிமாவிலும் பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது. இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மாகாபா ஆனந்த்:

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். விஜய் டிவியில் போட்டியாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ மாகாபா ஆனந்த் இருந்து விடுவார். சூப்பர் சிங்கர், அண்டாக்காகசம், ஊ சொல்றியா ஊஊ சொல்றியா போன்ற பல நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு 2.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே:

விஜய் டிவியில் பிரபலமான பெண் தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா. இவருடைய சிரிப்பும் நகைச்சுவையான பேச்சும் தான் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாகவே சென்றடைய இருந்தது. இவர் சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு 3 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

கோபிநாத்:

விஜய் டிவியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் கோபிநாத். நீயா நானா என்றால் கோபிநாத்தை தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இது தவிர இவர் விருது விழா, பிரபலங்களுடன் பேட்டி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் இவர் ஒரு எபிசோடுக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full