5 காஸ்ட்யூம், 5 பாட்டு - விஜய் பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட பாவனா.

By Rajkumar · 23/6/2020

தமிழகமே நேற்று தளபதி விஜய்யின் 46-வது பிறந்தநாளை சோசியல் மீடியாவில் பயங்கரமாக கொண்டாடி இருந்தது. பொதுவாகவே ஜூன் 22 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் திருவிழா போன்று கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் நாடே கொரோனா அச்சுறுத்தலில் இருப்பதால் விஜய் பிறந்தநாளை விமர்சனமாக கொண்டாட முடியாமல் போனது. இருந்தாலும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு தளபதி விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடி இருந்தனர்.

https://www.instagram.com/p/CBucNVRhfcK/

ரசிகர்கள் முதல் முன்னணி திரைபிரபலங்கள் வரை என பலரும் சமூகவலைதளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி பதிவிட்டு இருந்தார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சதீஷ் அவர்கள் ஆடியுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்து உள்ளது. நடிகர் சதீஷும், தொகுப்பாளினி பாவனாவும் விஜய்யின் வெவ்வேறு பாடல்களுக்கு நடனாடிய வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள்.

மேலும், தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இவர்கள் 5 பாடல்களுக்கு 5 விதமான காஸ்ட்யூம்கள் போட்டு நடனமாடும் வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோ வைரல் ஆகி சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டது. நடிகர் சதீஸ் விஜய் உடன் இணைந்து கத்தி, பைரவா போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/CBsAGNbhN0g/

தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full