உடன் நடித்த நடிகர்கள் உதவாத நிலையில் 30ஆயிரம் கொடுத்து உதவிக்கரம் நீட்டிய பாலா. மற்றவர்களும் உதவுவார்களா?

By Manikandan · 18/6/2023

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. தற்போது இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

அதோடு பொருளாதார நெருக்கடியினாலும் பாவா லக்ஷ்மண் தவித்து வாடிக் கொண்டு வருகிறார். தற்போது இவர் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் தனக்கு சில வருடங்களாக இருக்கும் பிரச்சனை குறித்தும், அதற்காக தான் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் பேசியிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கரமான வைரலான நிலையில் பலரும் தங்களினால் முடிந்த உதவிகளை பாவா லட்சுமணனுக்கு செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி, மற்றும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நடிகரான KPY பாலா, சமீபத்தில் சிகிச்சை பெற்றுவரும் பாவா லட்சுமணனை சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு தன்னால் முடிந்த உதவியையும் செய்தார். குறிப்பிடத்தக்க வகையில் பாலா 30 ஆயிரம் ருபாய் பணத்தை பாவா லட்சுமணனுக்கு நிதியாக வழங்கினார்.

இந்த பணத்தை அவர் கொடுக்கும் போது தான் 1 லட்சம் ருபாய் கொடுக்கலாம் என்று இருந்ததாகவும், ஆனால் வங்கிக்கணக்கில் 32ஆயிரம் ருபாய் தான் இருந்ததால் பெட்ரோல் செலவுக்கு 2000ஆயிரம் போக 30,000 மட்டுமே தன்னால் அன்பு பரிசாக வழங்குவதாக கூறினார். மேலும் இதன் போது பாவா லட்சுமணன் மாயி படத்தில் தன்னுடைய அடையாள நடிப்பான "வாம்மா மின்னல்" டயலாக்கையும் நடித்து காட்டினார்.

இந்நிலையில் kPYபாலா மட்டுமல்லாமல் தாடி பாலாஜியும் பாவா லட்சுமணனை சந்தித்து நலம் விசாரித்து உதவிகளையும் செய்தார். இந்த சந்திப்பு குறித்து தாடி பாலாஜி பேசுகையில் "எங்களுடைய களை குடுமப்த்தில் ஒருவராக இருக்கும் எங்களுடைய அன்னான் பாவா லட்சுமண உடல் நிலை சரியில்லாமல் இருப்பதை கேட்டு மாணவருத்தப் பாட்டேன். அதனால் அண்ணனை சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளையும் கேட்டருந்து, அந்த உதவியாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார் தாடி பாலாஜி.

View this post on Instagram

A post shared by Bj Bala (@bjbala_kpy)

இப்படிப்பட்ட நிலையில் கடந்த காலங்ககளில் வடிவேலு போன்ற பெரிய காமெடி நடிகர்களுடன் நடித்த பாவா லட்சுமணனும் தன்னுடைய நடித்த பல நடிகர்களும் உதவாத நிலையில், தனக்கு பிறகு நடக்க வந்த, தனனுடைய நடிக்காத பாலா, தாடி பாலாஜி போன்ற நடிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும், அதே நேரத்தில் உதவ முன்வராத நடிகர்களை விமர்சித்தும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full