KPY தீனாவுக்கு அழகான குழந்தை பிறந்தாச்சு, என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துகள்
கேபிஒய் தீனாவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தீனா. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த காமெடிகளை நாம் யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் தான் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி' என்ற படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார்.
அதன் பின்னர் ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது கைதி படம் தான். பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான் தீனா மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். பின் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள்.
தீனா திரைப்பயணம்:
இதை அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஸ்டேஜ் ஷோக்களை கூட செய்து கொண்டிருக்கின்றார். இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன் இவர் தன்னுடைய சொந்த ஊரில் வீடு கட்டி முடித்திருந்தார். அதன் பின் தீனாவிற்கு திருமணம் நடந்தது. தீனாவுக்கும் பிரகதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பிரகதி கிராபிக் டிசைனராகப் பணிபுரிகிறார்.
தீனா திருமணம்:
இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு இது லவ் மெசேஜ் ஆகும். திருமணத்திற்கு பின்பும் தீனா படங்களை பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் தீனாவின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். அதோடு தன் மனைவி பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் தீனா பகிர்ந்து இருந்தார்.
https://www.youtube.com/shorts/RZrfSkJS9zU
தீனா குழந்தை:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தீனாவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் தீனா- பிரகதி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சந்தோஷத்துடன் சோசியல் மீடியாவில் தீனா பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகளை கையில் ஏந்திய தருணத்தை உணர்ச்சி பூர்வமாக வீடியோவாக தீனா பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்